தனுஷ் பாடிய பாடலை வெளியிடும் செல்வராகவன்: எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷ் பாடிய பாடல் ஒன்றை அவருடைய சகோதரரும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் வெளியிடவுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அசோக்குமார், நாசர், கேஎஸ் ரவிக்குமார், ரித்விகா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘யார் துணையோ’ என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடி உள்ளதாகவும் கவிஞர் சினேகன் இயற்றி உள்ளதாகவும் ராதன் இசையமைப்பில் உருவாகிய இந்த பாடலை வரும் 9ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் செல்வராகவன் வெளியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் புரமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.