close
Choose your channels

'சாணிக்காகிதம்' புதிய ஸ்டில்: டெர்ரராக இருக்கும் செல்வராகவன்!

Thursday, March 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படமான ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பதும், அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் அவ்வப்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் சற்று முன்னர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’சாணிக்காகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவருடைய தோற்றம் டெர்ரராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என்று பெயர் எடுத்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயரையும் எடுப்பார் என்று பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தனுஷ் நடிக்கும் இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment