விஜயகாந்த் இதைத்தான் சொன்னார்.. வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே நிமிடத்தில் கூறிய செல்வராகவன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியதை அடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த உலகத்தில் நிறைய பேரு பார்த்திருக்கேன், நான் எதுவும் சாதிக்கலையே, நான் எதுவும் சாதிக்கலையே, அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டு சாதிச்சவங்களோட கம்பேர் பண்ணி ராத்திரி பகலா நொந்து நூலாகி ரொம்ப கஷ்டப்படுறாங்க.
ஆனா நாம ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்கணும், இது என் தாழ்மையான வேண்டுகோள், நம்ம இந்த உலகத்துக்கு நிஜமாகவே வந்தது பெருசா சாதனைகள் புரியவோ, இல்ல சொத்துக்கள் ஏராளமாக சேர்த்து வைக்கவோ இல்ல. கட்டு கட்டா பணம் பதுக்கி வைக்கவும் இல்லை, எதையாவது பெருசா சாதிக்கவும் இல்லைங்க.
இந்த உலகத்துக்கு நம்ம வந்த உண்மையான காரணம் என்னன்னா, இந்த உலகத்தில் நம்ம பிறவி ஒரு பஸ் ஸ்டாப் மாதிரி. நாம் சந்தோஷமாக கிடைக்கிற பஸ் ஸ்டாண்ட்ல, இருக்குற ஊர்ல இறங்கி, அந்த ஊர்ல என்ன இருக்குன்னு சுத்தி பார்க்க முடியுமோ பார்த்துட்டு ஒரு டிராவலர் மாதிரி எல்லாத்தையும் பாத்துட்டு சந்தோஷமா இருங்க.. பூக்களை பாருங்க, மரத்தை பாருங்க, ஒவ்வொரு செகண்டும் சந்தோஷப்பட்டு அனுபவித்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டவன் படைப்பின் அற்புதத்தை நம்ம என்ஜாய் பண்ணுங்க. நாம் இந்த உலகத்துக்கு வந்த ஒரே காரணம் இதுதான். மத்தபடி எதுக்கும் கவலைப்படாதீங்க, காசு இல்ல, பணம் இல்லன்னு வருத்தப்படாதீங்க. உலகத்த ரசிக்கிறதுக்கு காசு பணம் எதுவும் தேவையில்லை.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சொன்னது மாதிரி நம்ம செத்துப் போகும்போது 'அருணாக்கயிறு கூட அத்துட்டுதாங்க நம்மள தூக்கி நெருப்புல போடுவாங்க’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout