செல்வராகவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதை எடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
’பழைய வண்ணாரப்பேட்டை’ திரெளபதி’ மற்றும் ’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் ’பகாசூரன்’ , இந்த படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மகாபாரம் புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கேப்ஷனும் உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் மோகன்ஜி கூறியபோது, ’ஈசன் அருள்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பகாசுரன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.
#Bakasuran #பகாசூரன் Title look.. Shooting in progress.. 2022 Release.. pic.twitter.com/TR5Ifji4Pj
— selvaraghavan (@selvaraghavan) May 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com