செல்வராகவன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் சமீபகாலமாக நடித்தும் வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய வில்லனாகவும் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவரை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இன்னொரு திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ ’திரவுபதி’ மற்றும் ’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலை செல்வராகவன் மற்றும் மோகன்ஜி ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மோகன் ஜி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Pleasure is all mine ! Looking forward to this exciting new journey . God bless https://t.co/A3X8WtizV8
— selvaraghavan (@selvaraghavan) December 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments