செல்வராகவன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்தும் வரும் செல்வராகவன் நடித்த அடுத்த திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன், நட்ராஜ் சுப்பிரமணியன், ராதா ரவி, கே ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பிஎல் தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
#Bakasuran censored with U/A and its a february release.. Official release date will be announced soon..
— selvaraghavan (@selvaraghavan) January 16, 2023
Trailer linkhttps://t.co/gUZQhrP8nx pic.twitter.com/N0Ad6z6Fn4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com