தனுஷின் 'நானே வருவேன்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: செல்வராகவன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் 'நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்ற ’வாகைசூடவா’ ’அனேகன்’ ’ஆரம்பம்’ ’மாரி’, ‘மாரி 2’ ’காஷ்மோரா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் என்பது தெரிந்ததே. தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படத்தில் இந்த இரண்டு பிரபலங்களும் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Glad to be working with some remarkable world class technicians @omdop @dhilipaction
— selvaraghavan (@selvaraghavan) February 26, 2022
And of course a special and extremely gifted actor @dhanushkraja pic.twitter.com/iZBs6DQRP2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments