தனுஷின் 'நானே வருவேன்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: செல்வராகவன் அறிவிப்பு

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் 'நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்ற ’வாகைசூடவா’ ’அனேகன்’ ’ஆரம்பம்’ ’மாரி’, ‘மாரி 2’ ’காஷ்மோரா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோல் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் என்பது தெரிந்ததே. தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படத்தில் இந்த இரண்டு பிரபலங்களும் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 

More News

'தளபதி 66' திரைப்படத்தில் இணைகிறாரா எஸ்.எஸ்.ராஜமெளலி பட ஹீரோ?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 66' திரைப்படம் அதே ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு

சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் ரிலீஸ் ஆவதால் 'டான்' திரைப்படத்தின்

நாளை முதல் 'வலிமை' படத்தில் திடீர் மாற்றம்: விறுவிறுப்பு அதிகரிக்குமா?

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் திடீர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்ச் 18ல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்!

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இந்த பிரபல நடிகரா?

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'மாநாடு' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது