close
Choose your channels

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் திட்டம்

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மூன்று முன்னணி இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்த பெருமை 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்திற்கு உண்டு என்பது அனைவரும் தெரிந்ததே. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள படகுழுவினர் செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். செப்டம்பர் 2,3,4 ஆகிய வார விடுமுறை நாட்களுடன் 5ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி விடுமுறையும் வருவதால் இந்த படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கும் முதல் திகில் படமான இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment