’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

(செல்வராகவனின் முந்தைய படங்களை வைத்து, அவர் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் சரத் என்ற ரசிகரின் அலசல். கருத்துக்கள் அனைத்தும் எழுதியவருடையவை)

காதல் கொண்டேன்' படத்தில் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு அந்த காயம் மனதில் ரணமாக இருந்துகொண்டு இருக்கும் சிறுவன் கிராமத்து விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவன், பொறியியல் படிப்பதற்கு சென்னை வரும் வினோத், தாழ்வுமனப்பான்மையால் மனதில் இருக்கும் ரணத்துடன் தவித்து கொண்டு இருப்பான். திவ்யா என்ற தேவதை அவன் வாழ்வில் வந்து அவன் தாழ்வு மனப்பான்மையை போக்கி உருமாற்றுகிறாள். திவ்யா என்ற தேவதையாலும் அவள் மீது கொண்ட காதலாலும் அவன் வாழ்க்கை மாறுகிறது.

செல்வாவின் அடுத்த படம் '7ஜி ரெயின்போ காலனி'; பொறுக்கிதனமாக விட்டோத்தியாக சுத்திகொண்டு இருக்கும் கதிர், அவனுக்கு எதுவுமே தெரியாது, படிப்பு வராது, வேலை செய்ய தெரியாது. நன்றாக குடிப்பான், சண்டை போடுவான் வாழ்க்கையை பத்தி துளி கூட அக்கறையும், கவலையும் இல்லாமல் இருக்கும் அனிதா என்ற தேவதையின் காதலால்தான் கதிரின் வாழ்க்கை அழகாகிறது. அந்தக் காதல்தான் அவனை வாழ்க்கையை நோக்கி நகர்த்தியது. அவன் இன்னும் உயிர்ப்புடன் வாழ அந்த காதல்தான் காரணம்

செல்வாவின் அடுத்த படம் 'புதுப்பேட்டை' இது ஒரு தாதா படம், சர்வைவல் கதை என்று தான் பலர் எண்ணுவார்கள் குமாரு வளர்வது கிருஷ்ணவேணியால், அவன் வீழ்ச்சி ஆரம்பிப்பது செல்வியால் இதிலும், நாயகன் பெண்களாலே வாழ்ந்து அவர்களாலே வீழ்வான், புதுப்பேட்டை தாதா கதை என்றாலும் இதிலும் காதல் காட்சிகள் இருக்கும். எந்த காட்சின்னு யோசிக்கிறிங்களா? குமாரு அன்பை போட்டுட்டு அவர் வீட்டை அடைந்ததுக்கு பின் கிருஷ்ணவேணி (சினேகா) அவன் ரூமுக்கு வருவாள் அவள் யார் யாருக்கு என்ன அறை ஒதுக்கி இருப்பேன்னு சொல்லுவாள். அப்போது குமார் பார்க்கும் பார்வை கிருஷ்ணவேணி 'ராத்திரி வெச்சுக்கிடலாமா கோவம் இல்லையே'ன்னு கேக்குறது குமார் ஒரு நிமிஷம்ன்னு கூப்பிட்டு கிருஷ்ணவேணியை கட்டிபிடிப்பது பின்னணியில் வரும் யுவனின் இசை ஒன் ஆப் தி பெஸ்ட் லவ் சீன்ஸ் இன் தமிழ் சினிமா

'ஆயிரத்தில் ஒருவன்'ல் காதல் இருக்காது ஆனால் அதிலும் அனிதா, லாவண்யா என்ற பெண்கள் தான் அந்த கதையையே நகர்த்தி செல்வார்கள்.

செல்வாவின் அடுத்த படைப்பு 'மயக்கம் என்ன'. ஒரு புகைப்படக் கலைஞன் அவன் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துகொண்டு இருக்கும் கலைஞன் ஒருகட்டத்தில் மனநலம் பாதிக்கபடும்அ.ந்த கலைஞனை யாமினி என்ற தேவதையின் காதல் தான் மீட்டுகொண்டுவந்து அவனை வாழ்வில் வெற்றி பெற வைக்கும்

செல்வாவின் அடுத்த படைப்பு 'இரண்டாம் உலகம்,' காதல் இல்லை எனில் உலகம் அழிவை நோக்கி செல்லும் என்பதை இரண்டு உலகத்தில் நடக்கும் கதையில் மிகவும் அழகாய் சொல்லிருப்பார். பெண்களை வெறும் போகப்பொருளாய் மட்டும் பார்க்கும் உலகம் அப்படியே இருந்தால் அந்த உலகம் அழிவை நோக்கிச் செல்லும் என்று அற்புதமாய் சொல்லிருப்பார். உண்மையான காதலுக்கு மட்டும் தான் எந்த உலகமாயினும் இசைந்து வழிவிடும் என்பது தான் இரண்டாம் உலகம்

செல்வா எழுதி அவர் மனைவி கீதா இயக்கிய 'மாலை நேரத்து மயக்கம்ச', ரசனைகள், விருப்பங்கள் எல்லாம் மாறுபட்டு இருக்கும் ஒரு பையனும்,பெண்ணும், arranged marriageல் எப்படி ஒற்றுமையாக வாழ முடியும்? இருவருமே வெவ்வேறு பழக்கவழக்கம் உடையவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்த பின் வரும் பிரச்சனைகளும் அதன் பின் அவர்களுக்குள் பூக்கும் காதலை அழகாய் எழுதி இருப்பார் செல்வா.

இப்போது செல்வா SJ.சூர்யாவை வைத்து இயக்கி கொண்டு இருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை', படம் ஹாரர் பேய் படம் தான் என்றாலும் அதிலும் ஒரு மெலிதான, அழகான காதல் கதை இருக்கும் என்பது என் எண்ணம். 'நெஞ்சம் மறப்பதில்லை', படத்தில் ரெஜினா பேய் என்கிறார்கள். அவளுக்கு பின்னால் ஒரு அற்புதமான காதல் கதையும், அதே நேரத்தில் திகில் நிறைந்த பேய் படமாகவும் எடுத்து இருப்பாரென்று நம்பலாம்.

'நெஞ்சம் மறப்பதில்லை' என்று படத்தின் பெயர் அறிவித்த அன்று யோசித்தேன் இது ஏன் 7ஜியின் கிளைமாக்ஸ் பின்வரும் தொடர்ச்சியாக இருக்க கூடாதுன்னு, இப்போது ரிலீஸ் ஆகிருக்கும் போஸ்டர் அப்படி இருக்காதுன்னு புரிய வைத்தாலும் அவசியம் இந்த படத்திலும் காதலும், பெண்களும் தான் படத்தை நகர்த்தி செல்வார்கள்,திவ்யா,அனிதா,யாமினி,கிருஷ்ணவேணி,மனோஜா போல இதிலும் ரெஜினா கேரக்டர் பேசப்படும். செல்வா,யுவன்,அர்விந்த்கிருஷ்ணா பத்து வருடங்களுக்கு பின் இந்த மூம்மூர்த்திகள் இணைந்து இருக்கும் படத்தை காண ஆவலோட காத்து இருக்கிறேன்..

செல்வராகவன் படங்கள் குறித்தும் 'நெஞ்சம் மற்றப்பதில்லை' படம் குறித்தும், வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறோம்.

More News

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர்

ஜெயம் ரவி நடிப்பில் பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...

இன்று மாலை சிம்பு படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அவர் நடித்த இன்னொரு படமான 'அச்சம் என்பது மடமையடா'...

பிரபல நடிகருக்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுமின்றி இசையிலும் நல்ல ஆர்வம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடித்த படங்களில் பாடுவது மட்டுமின்றி தனிப்பாடல்களின் தொகுப்பையும் அவ்வப்போது அவர் வெளியிட்டு வருகிறார்...

'மூடர்கூடம்' நவீனுடன் இணைந்த சிம்பு

கடந்த 2013ஆம் ஆண்டு நவீன், ஓவியா நடிப்பில் வெளியான 'மூடர்கூடம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது...

2 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரகாஷ்ராஜின் புதிய முயற்சி

கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்த ஏராளமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர் சிறந்த குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக விளங்கி வரும்...