close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்தில் செல்வராகவன் பட ஹீரோயின்..!

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லியின் அடுத்த படத்தில் செல்வராகவன் படத்தில் நடித்த நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தெறி’. இந்த படத்தின் நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியானது என்பதும் இந்த படத்தை ஜீவா நடித்த ’கீ’ என்ற படத்தை இயக்கிய காளிஸ் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.

அட்லி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக வாமிகா கபி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே செல்வராகவன் எழுத்தில் அவரது மனைவி கீதா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் ’ஜெனி’ என்ற திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment