விமானத்தில் பர்ஸை தொலைத்துவிட்ட செல்வராகவன்.. அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் தனது பர்ஸை தொலைத்து விட்டதாகவும் ஆனால் அரை மணி நேரத்தில் அதிசயம் ஏற்பட்டு தனது பர்ஸ் கிடைத்துவிட்டது என்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்பதும் அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'D50’ என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்
இந்த நிலையில் சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்வராகவன் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது பர்ஸ் தொலைந்து விட்டது. இதனை அடுத்து ஏர் இந்தியா அலுவலகத்தில் அவர் புகார் அளித்த நிலையில் அரைமணி நேரத்தில் அவரது பர்ஸ் கிடைத்து விட்டதாக ஏர் இந்தியா அவருக்கு தகவல் அனுப்பியது. இதனை அடுத்து அவர் ஏர் இந்திய அலுவலகம் சென்று தனது பர்ஸை பெற்றுக் கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்
மேலும் சில நிமிடங்களில் தனது பர்ஸை கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்..
I missed my wallet in @airindia flight from madurai today. With in fifteen minutes they called and informed me. They have sent a mail about the contents and I collected the wallet. I'm really really impressed. A big thanks to @airindia !
— selvaraghavan (@selvaraghavan) August 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com