கர்வம் இருக்கணும், கடிகாரத்தை பார்க்க கூடாது: செல்வராகவன் கூறிய பொன்மொழி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பொன்மொழிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு தெரிவித்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் கூறியபோது ’நாம் செய்கிற வேலையில் கர்வம் இருக்க வேண்டும் என்றும் வேலை செய்யும் போது கடிகாரத்தை பார்க்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:
பொதுவாக இப்போது அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், மற்ற இடத்திலும் சொல்லும் ஒரு புகார் என்னவெனில் இந்த வேலை ரொம்ப கொடுமையாக இருக்கிறது, வறுத்தெடுக்கிறார்கள் என்று வேலையை பற்றி பல புகார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், வல்லரசு நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்.
வல்லரசு நாடுகளில் எந்த வேலையாக இருந்தாலும் தான் செய்கிற வேலையில் ஒரு கர்வம் இருக்கும், கர்வம் மண்டையில் இருக்க கூடாது, ஆனால் செய்கிற வேலையில் கர்வம் இருக்க வேண்டும். நான் ஆட்டோ டிரைவர், நான் டாக்ஸி டிரைவர் என்று எந்த வேலை செய்கிறோமோ அந்த வேலையை கர்வமாக செய்ய வேண்டும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் செய்கிற வேலையை மிகவும் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட தேவையில்லை, வேலை செய்யும் போது கடிகாரம் பார்க்காமல் இருந்தால் கண்டிப்பாக அந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்யலாம் . ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மலையேறும் போது உச்சியை பார்க்க கூடாது, பார்த்தால் ஏறும் மனப்பான்மையே போய்விடும், பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏற வேண்டும், அது மாதிரி தான் நாம் செய்யும் வேலையும்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com