செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

அமேசான் ஓடிடியில் ‘சாணிக்காகிதம்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் அமேசானில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அமேசான் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல்முறையாக செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, சுதா கொங்கரா ஆகியோர்களுடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசையமைப்பில் யாமினி யாக்னாமூர்த்தி ஒளிப்பதிவில் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.