முதல்முறையாக இணையும் விஜய்-செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

தளபதி விஜய் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் அபர்ணாதாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் இதில் ஒருவர் பிரபல மலையாள நடிகர் சாக்கோ என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது செல்வராகவன் அறிவிக்கப்பட்டதால் அவரும் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு வில்லன் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்