இருட்டு அறையில் தனிமைப்படுத்தி கொண்ட செல்வராகவன்: புகைப்படம் வைரல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன். அதன்பின்னர் ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும், விரைவில் அவர் தனுஷ் நடிக்கவிருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடிகராக மாறி உள்ள செல்வராகவன் ,’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்திலும், தளபதி விஜய்யின்’ பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும்,அது மட்டுமன்றி அவருக்கு மேலும் சில நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட செல்வராகவன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அறையை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இருட்டாக இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் சமீபத்தில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.