செல்வராகவனின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படம் ’சாணிக்காகிதம்’ என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ’ஆரண்யகாண்டம்’ திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும், சுதா கொங்கரா இயக்கிய ’இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இருந்த அருண் மாதேஸ்வரன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இது குறித்த புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’சாணிக்காகிதம்’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல் கட்டமாக செல்வராகவன் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சாணிக்காகிதம்’ திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.