செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!
- IndiaGlitz, [Monday,February 08 2021]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’நெஞ்சம் மறப்பதில்லை’. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில், பிரசன்னா படத் தொகுப்பில் உருவான இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஒருசில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் இதனை அடுத்து ஒரு மாதத்தில் ஓடிடியிலும் ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான ’மன்னவன் வந்தானடி’ என்ற திரைப்படமும் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது செல்வராகவன் ’சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தனுஷ் நடிப்பில் உருவாகும் இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tamil film #NenjamMarapathillai by @selvaraghavan will have a Theatrical release in March 2021 followed by OTT release in 30 days.
— LetsOTT GLOBAL (@LetsOTT) February 8, 2021
Official announcement today.