'இது வேற விளையாட்டு': செல்வராகவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் நாயகன் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் இந்த படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் அவர் ராமசாமி என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் ’பெரிய திரையில் ராமசாமியை நீங்கள் மார்ச் 5ஆம் தேதி பார்க்கலாம்’ என்றும் ’இது வேற விளையாட்டு’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்த படம் செல்வராகவனின் வெற்றிப் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#NenjamMarappathillai official poster...
— S J Suryah (@iam_SJSuryah) February 24, 2021
Ramsey @ Ramasamy will meet you on big screens from March 5... ??️
இது வேற விளையாட்டு@selvaraghavan @thisisysr @ReginaCassandra @Madan2791 @Nanditasweta @Rockfortent @kbsriram16 @APVMaran pic.twitter.com/Ptw8siBXJR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments