'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் நாயகி இவரா?  படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான ’7ஜி ரெயின்போ காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழ் தெலுங்கு என இரண்டிலும் வெற்றி பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தற்போது அனஸ்வரராஜன் என்பவர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஒரு சில மலையாள படங்களிலும் தமிழில் த்ரிஷா நடித்த ’ராங்கி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

சமீப காலமாக வெளியான இரண்டாம் பாக திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இந்த படமாவது வெற்றி பெறுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.