நான் இன்னும் சாகல.. திரும்பி வருவேன்.. ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரசிகரின் ட்விட் ஒன்றுக்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன் ’நான் இன்னும் சாகவில்லை அல்லது ரிட்டயர் ஆகவில்லை, கண்டிப்பாக திரும்ப வருவேன்’ என்று பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்கள் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ என்ற ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் உள்ளார்.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் செல்வராகவன் பிஸியாக உள்ளார் என்பதும் விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் கூட நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் செல்வராகவன் குறித்து தனது டிவிட்டில், ‘''விவேக் ஒரு காமெடியில் சொல்வார், இயக்குநர் ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் என. அப்படி ஒரு படம்'' என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்துக்கிருக்கார்’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில், ‘ஏன் நண்பா, நான் சாகவும் இல்லை. ஓய்வை அறிவிக்கவும் இல்லை. நான் தற்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். நான் 40களில் இருக்கிறேன். விரைவில் திரும்பி வருவேன்'' என்று கூறியுள்ளார்.
Why my friend ? I'm not dead or retired. I have just spent some time for myself. I'm just in my forties .. And I'm back. https://t.co/CYdLcoG97k
— selvaraghavan (@selvaraghavan) May 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments