செல்வராகவன் - யோகி பாபு இணையும் அரசியல் படம்.. பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்வராகவன் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் அரசியல் திரைப்படத்தில் பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் செல்வராகவன் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் செல்வராகவன் தென் மாவட்ட அரசியல் கதை ஒன்றில் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த படத்தின் நாயகி ஆக பிரபல ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்கி வருகிறார். தென் தமிழகத்தில் உள்ள அரசியல் குறித்த கதையம்சம் கொண்டது இந்த படம் என்றும் சில சுவாரசியமான நிகழ்வுகள் இந்த படத்தில் இருப்பதாகவும் செல்வராகவன் இந்த கதையை கேட்டு விரும்பி நடித்து வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் 50 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பிரபல இசையமைப்பாளர் இந்த படத்திற்கு இசையமைத்து வருவதாகவும் அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குனராக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments