இந்த ஏரியாவுல யாருக்காவது மேட்டர் வேணும்ன்னா எனக்கு தான் கால் பண்ணுவாங்க.. 'பகாசூரன்' டிரைலர்

இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்களை ஏமாற்றும் கும்பலை பழிவாங்கும் கேரக்டரில் செல்வராகவன் நடித்து இருக்கிறார் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. அதேபோல் அந்த கும்பலை சட்டத்தின்படி நிற்க வைக்க இன்னொரு பக்கம் நட்டி நடராஜ் போராடி வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றுமுன் வெளியான இந்த படத்தின் டிரைலர் உள்ள ஆவேசமான வசனங்கள் சில:

மனைவியை கவனிக்காத கணவர்களை தாண்டி பெண்கள் தங்களுக்கான சிற்றின்பத்தை தேடிக் கொண்டால் கள்ளக்காதலர்கள் என்று கேவலப்படுத்துகிறார்கள். நாம் அதை அப்படி சொல்ல கூடாது. திருமணம் கடந்த ஒரு புனிதமான உறவு என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

தப்பு பண்ண அவங்க எல்லாம் சாக வேண்டியதுதான் ஆனால் இப்படி இல்ல அசிங்கப்பட்டு சாகனும்.

ஆம்பளைங்க மூளையை வைத்து சம்பாதிக்கிற மாதிரி பொண்ணுங்க உடம்பை வைத்து சம்பாதித்தார் தப்பு இல்ல.

வாழ்க்கையில என்ன நடந்தாலும் எதிர்த்து போராடனுமே தவிர இப்படி எல்லாம் இறங்கி விடக்கூடாது, ஒழுக்கத்தை விட்டோம் என்றால் எல்லாம் நாசமாகப் போய்விடும்.

செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.