மனைவியுடன் அந்தரத்தில் தொங்கும் செல்வராகவன்.. அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகிய இருவரும் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார்கள். அந்த வகையில் செல்வராகவன் சற்று முன் தனது மனைவியுடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இருவரும் பேசும் உரையாடல் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ’எங்க தலைவனை குழந்தையாக மாத்திட்டீங்க, பத்திரமா பாத்துக்கோங்க’ ’குழந்தையை ஏன் இப்படி பாடா படுத்துறீங்க ’போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
இயக்குனர் செல்வராகவன் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடித்தும் வருகிறார். அவர் தற்போது விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் விரைவில் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout