சன் டிவி தொடரில் நடிக்கும் தனுஷ்-செல்வராகவன் பட நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் செல்வராகவன் படங்களில் நாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் ’பூவேஉனக்காக’ என்ற தொடரும் அதில் ஒன்று என்பது தெரிந்ததே. இந்த தொடரின் நடிக்கும் நட்சத்திரங்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வந்தாலும் இந்த தொடரின் கதை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை இந்த தொடர் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஆக ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சோனியா அகர்வால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது .
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘7ஜி ரெயின்போ காலனி’, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் சோனியா அகர்வால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா அகர்வால் special guest!
— Sun TV (@SunTV) March 18, 2022
Poove Unakkaga | Mar 20 | 2 PM#SunTV #PooveUnakkaga #PooveUnakkagaOnSunTV #PooveUnakkagaPromo @soniya_agg pic.twitter.com/bwoqGWrOyz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments