close
Choose your channels

அதிரடி அரசியல் ஆக்சன் படத்தில் செல்வராகவன்.. இயக்குனர் யார் தெரியுமா?

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின்னர் ’சாணிக் காகிதம்’ ’பகாசுரன்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் அவர் தற்போது விஷால் நடித்துள்ள ’மார்க் ஆண்டன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் ஆக்சன் கதை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ’ஜெயிலர்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் யோகி பாபு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வராகவன் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment