'கான்' பட வதந்திக்கு செல்வராகவன் முற்றுப்புள்ளி
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு, கேதரீன் தெரசா நடித்து வரும் 'கான்' திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வந்த நிலையில் இன்று காலை முதல் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதுகுறித்து செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
'கான்' படம் குறித்து நிறைய வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் நான் அதற்கு தகுந்த பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். கான் படத்தின் திரைக்கதை என் மனதை மிகவும் கவர்ந்த நெருக்கமான கதையம்சம் கொண்ட ஒரு படம். இருப்பினும் ஒருசில காரணங்களால் இந்த படத்தை நானும் படக்குழுவினர்களும் ஒருமனதாக இணைந்து படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
ஆனாலும் இந்தப் படத்தை அடுத்த வருடம் மீண்டும் துவக்க முடிவு செய்திருக்கின்றோம். சிம்பு மற்றும் 'கான்' படக்குழுவினர்களுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com