'ஆயிரத்தில் ஒருவன்' உண்மையான பட்ஜெட்: அதிர்ச்சி தகவல் அளித்த செல்வராகவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் தமிழில் சுமாரான வெற்றியை பெற்றாலும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் விரைவில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் என்றும், ஆனால் அந்த அளவுக்கு படம் வசூல் செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் என விக்கிபீடியா இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
ஆனால் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி ரூபாய் தான் என்றும் ஆனால் நாங்கள் படத்தின் பட்ஜெட்டை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக 32 கோடி என வெளியிட்டதாகவும், என்ன ஒரு முட்டாள்தனமான வேலை என்பது தற்போது புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்து விட்டாலும் அந்த படம் சராசரி படமாக கருதப்பட்டது என்றும் சரியாக பொய் சொல்ல நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்த உண்மையான பட்ஜெட்டை 11 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The actual budget of #aayirathiloruvan was 18 crores. But we decided to announce it as a 32 crore film to hype it as a mega budget film. What stupidity! Even though the film managed to collect the actual budget it was regarded as average! Learnt not to lie whatever the odds are!
— selvaraghavan (@selvaraghavan) August 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com