நடிகர் விஜய் எம்ஜிஆர் போல.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் காரணம்..!

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

நடிகர் விஜய், எம்ஜிஆர் போல தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிலையில் நடிகர் விஜய் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். நடிகர் விஜய் நன்றாக செயல்பட கூடியவர், அவர் அரசியல் கட்சி தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

மேலும் எம்ஜிஆர் போலவே சம்பாதித்த பணத்தை மக்களுக்காக விஜய் செலவழிக்க நினைக்கிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தது அவருக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை என்றும் தெரிவித்தார்

மேலும் சினிமா துறையை தற்போது திமுக கைப்பற்றியுள்ளது என்றும் திமுக ஆட்சி வந்தாலே சினிமாத்துறைக்கு சிக்கல் தான் என்றும் அவர் கூறினார். ஏவிஎம் நிறுவனமே தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டனர் என்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் அதிக திரையரங்குகளை கைப்பற்றி உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘இஅதிமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருந்தார்.