கலைப்புலி எஸ். தாணுவின் அடுத்த பட பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரமாண்டமான தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வெளியிட உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் வெற்றிமாறனின் பேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், இளையராஜா படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are excited to share the first look poster of "Selfie",a movie directed by @mathimaaran Trained from the school of the accomplished Director @VetriMaaran. Celebrate, Rejoice and Enjoy the big screen Selfie experience in theaters... @DGfilmCompany #SelfieMovie pic.twitter.com/NJv86AucYk
— Kalaippuli S Thanu (@theVcreations) September 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com