தானியங்கி கார் மோதி பெண் பலி

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் தனியார் கார் புக்கிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்தது. டிரைவர் இல்லாத இந்த கார் ஜிபிஎஸ் மூலம் இயங்குவதால் எந்தவித விபத்தையும் ஏற்படுத்தாது என்று அறிமுகம் செய்தபோது உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இந்நிறுவனத்தின் தானியங்கி கார் ஒன்று அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இயங்கி வந்த தானியங்கி கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்த கார் நிறுவனம், இறந்த பெண்ணின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் தானியங்கி கார் விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

More News

வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டு கொலை செய்த தம்பி

மிஸிசிபி நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது உடன்பிறந்த அக்காவை சுட்டு கொலை செய்துள்ளான்.

நடராஜன் மறைவு எதிரொலி: பரோலில் வருகிறார் சசிகலா?

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானதை அடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா பரோலில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

கடந்த 16ஆம் தேதி உடல்நலக்கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

சக நடிகருக்காக விஜய்சேதுபதி முதன்முதலில் செய்த விஷயம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ரசிகர்களிடமே முத்தம் கொடுத்து நெருக்கமாக இருக்கும் நிலையில் சக நடிகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்பதை சொல்லவே தேவையில்லை.

பாதியில் உள்ள ஸ்ரீதேவி படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நடித்த ஒரு படம் முழுமை பெறாமல் பாதியில் உள்ளது.