கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வரின் சர்ச்சை பேச்சு
- IndiaGlitz, [Thursday,November 30 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் பேசுவது பெரும்பாலும் உளறல்களாக இருப்பதை பொதுமக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர். டெல்லியில் இருந்து பேருந்தில் டெங்கு கொசு வந்தது என்று கூறியது முதல் வைகை அணையை தெர்மோகோல் போட்டது வரையிலான அமைச்சர்களின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் அவ்வப்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருவது தெரிந்ததே
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி அவர்களே இன்று நடந்த ஒரு விழாவில் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று பேசியுள்ளார். கம்பராமாயணம் என்ற சொல்லிலேயே கம்பர் என்று அந்த் நூலின் ஆசிரியர் பெயர் இருக்கையில், அந்த நூலை எழுதியது சேக்கிழார் என்று முதல்வர் ஈபிஎஸ் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றாக ராமாயணத்தை எழுதிய ஆசிரியர் பெயரை மாற்றி கூறியதை நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினர்களும் கண்டித்து வருகின்றனர்.