கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வரின் சர்ச்சை பேச்சு

  • IndiaGlitz, [Thursday,November 30 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் பேசுவது பெரும்பாலும் உளறல்களாக இருப்பதை பொதுமக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர். டெல்லியில் இருந்து பேருந்தில் டெங்கு கொசு வந்தது என்று கூறியது முதல் வைகை அணையை தெர்மோகோல் போட்டது வரையிலான அமைச்சர்களின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் அவ்வப்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி அவர்களே இன்று நடந்த ஒரு விழாவில் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று பேசியுள்ளார். கம்பராமாயணம் என்ற சொல்லிலேயே கம்பர் என்று அந்த் நூலின் ஆசிரியர் பெயர் இருக்கையில், அந்த நூலை எழுதியது சேக்கிழார் என்று முதல்வர் ஈபிஎஸ் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றாக ராமாயணத்தை எழுதிய ஆசிரியர் பெயரை மாற்றி கூறியதை நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினர்களும் கண்டித்து வருகின்றனர்.

More News

குமரி அருகே ஓகி புயல்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாகவும், இந்த புயல் குமரி கடலோர பகுதி வழியாக மேற்கு நோக்கி நகரும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடலோர பகுதியில்

கொள்ளை அடிப்பவரை தாக்க தயார். டுவிட்டரில் கமல் ஆவேசம்

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது டுவிட்டரில் சமூக அக்கறையுடன் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகிறார். அவரது கருத்து பெரும்பாலும் ஆளும் அரசின் ஊழல்களை குறித்தே இருப்பதால் பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.

மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு: மீண்டும் ஒரு சர்ச்சை அறிவிப்பு

'பத்மாவதி; திரைப்பட பிரச்சனை கடந்த சில வாரங்களாக கொழுந்துவிட்டு எரிது கொண்டிருக்கும் நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள்

விஷாலின் 'சண்டைக்கோழி 2' படத்தில் இணைந்த தனுஷ்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து சுப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' தற்போது தயாராகி வருகிறது.

கனமழை எதிரொலி: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.