சேகர் ரெட்டி அதிரடி கைது. சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து ரூ.131 கோடி பணமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்ட நிலையில் சற்று முன்னர் சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பறிமாற்றம் காரணமாக சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் அவருக்கு நெருக்கமான நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் சோதனை செய்து வரும் வரிமான வரித்துறையினர் 40க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com