தோனியின் கேப்டன்சிக்கு வெறும் 4 மதிப்பெண்கள் தான்: பிரபல கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது என்பதும் இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி நிலையில் முக்கிய விக்கெட்டுக்களான முரளிவிஜய், வாட்சன், ருத்ராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ஆகியோர்களின் விக்கெட்டுகள் விழுந்தவுடன் ஐந்தாவது நபராக தோனி களம் இறங்கி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்
ஆனால் தோனி ஏழாவது பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார் என்றும், இருப்பினும் அவர் களம் இறங்கிய உடன் பல பந்துகளை வீணடித்தார் என்றும் சிங்கிள் எடுக்கவே திணறினார் விமர்சனம் செய்யப்பட்டது. டார்கெட் 217 இருக்கும் நிலையில் தோனி போன்ற ஒரு அனுபவம் உள்ள அதுவும் கேப்டனாக இருப்பவர் ஏழாவது இறங்கி சிங்கிள்ஸை அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
கடைசி ஓவரில் தோனி 3 சிக்ஸர்கள் அடித்தது திருப்திகரமான விஷயம்தான் என்றாலும் அவர் முன் கூட்டியே இந்த அதிரடியை தொடங்கியிருக்க வேண்டும் என்றும் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்து பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியபோது ’தோனி இலக்கை எட்ட முயற்சியே செய்யவில்லை. தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருக்க வேண்டும் அல்லது மற்றும் ஜடேஜாவை இறக்கியிருக்க வேண்டும். கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தது பெரிய விஷயமாக கருதப்பட்டாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. நேற்றைய போட்டியில் தோனியின் கேப்டன்சிக்கு 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன்’ என்று சேவாக் கூறியுள்ளார்.
"MS Dhoni की आज की captaincy को दूंगा 4/10 अंक," @virendersehwag @My11Circle प्रेज़ेंट्स #CricbuzzLIVE हिन्दी पर#RRvCSK #MSDhoni #SanjuSamson #SteveSmith pic.twitter.com/MNnoqR5CZw
— Cricbuzz (@cricbuzz) September 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments