தோனியின் கேப்டன்சிக்கு வெறும் 4 மதிப்பெண்கள் தான்: பிரபல கிரிக்கெட் வீரர்!

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது என்பதும் இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி நிலையில் முக்கிய விக்கெட்டுக்களான முரளிவிஜய், வாட்சன், ருத்ராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ஆகியோர்களின் விக்கெட்டுகள் விழுந்தவுடன் ஐந்தாவது நபராக தோனி களம் இறங்கி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்

ஆனால் தோனி ஏழாவது பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார் என்றும், இருப்பினும் அவர் களம் இறங்கிய உடன் பல பந்துகளை வீணடித்தார் என்றும் சிங்கிள் எடுக்கவே திணறினார் விமர்சனம் செய்யப்பட்டது. டார்கெட் 217 இருக்கும் நிலையில் தோனி போன்ற ஒரு அனுபவம் உள்ள அதுவும் கேப்டனாக இருப்பவர் ஏழாவது இறங்கி சிங்கிள்ஸை அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கடைசி ஓவரில் தோனி 3 சிக்ஸர்கள் அடித்தது திருப்திகரமான விஷயம்தான் என்றாலும் அவர் முன் கூட்டியே இந்த அதிரடியை தொடங்கியிருக்க வேண்டும் என்றும் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்து பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியபோது ’தோனி இலக்கை எட்ட முயற்சியே செய்யவில்லை. தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருக்க வேண்டும் அல்லது மற்றும் ஜடேஜாவை இறக்கியிருக்க வேண்டும். கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தது பெரிய விஷயமாக கருதப்பட்டாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. நேற்றைய போட்டியில் தோனியின் கேப்டன்சிக்கு 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன்’ என்று சேவாக் கூறியுள்ளார்.

More News

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்': புதிய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் நான்கு நடிகைகள் கைதா? பரபரப்பு தகவல் 

திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சம்பந்தமான வழக்கில் பாலிவுட் நடிகை ரியா

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!! இப்படியும் மனிதர்கள்…

நாகரிக வளர்ச்சி குறித்து பக்கம் பக்கமாகப் பேசும் நம்முடைய சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பில் மட்டும் எப்போதும் கோட்டை விட்டு விடுகிறது.

கத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி!!!

இந்தோனேசியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட சீன கைதி ஒருவர் கத்திப்பட பாணியில் சுரங்கம் தோண்டி தப்பித்தச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்ட மகன்கள்: மனித உரிமை ஆணையம் சென்ற தமிழ் நடிகை

தமிழ் நடிகை ஒருவரின் இரண்டு மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியதை கண்டித்து,ம் அந்த நடிகை மனித உரிமை ஆணையத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளதால்