குழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்த்து “குழந்தை கூட தனது டயப்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காது“. ஆனால் ப்ளேயிங் 11 வீரர்களை அடிக்கடி பஞ்சாப் கிங்ஸ் மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதுதான் படு தோல்விக்கு காரணம் என மோசமாக விமர்சித்து உள்ளார்.
ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் 32 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்ட ராஜஸ்தான் ராயல் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. இதில் கடைசி ஓவர் படு பரபரப்பாக இருந்ததோடு பஞ்சாப் அணியின் மோசமான நிலையையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே 8 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அந்த அணி 7 ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆடிய ஆட்டம் படு சொதப்பலாக அமைந்திருந்தது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் ராஜஸ்தான் ராயல் அணியின் எவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் அணி களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை குவித்த இந்த ஜோடியில் இருந்து லீவிஸ் 36 ரன்களை எடுத்து அவுட்டானார்.
அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களுக்கும் லிவிங்ஸ்டன் 25 ரன்களுக்கும் ஜெய்ஸ்வால் 49 ரன்களுக்கும் லாம்ரார் 43 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதையடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்திருந்த ராஜஸ்தான் அணியின் மற்ற வீரர்களான ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ் போன்ற வீரர்கள் கையை விரிக்க 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்து இருந்தது.
இதனால் 187 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ,தொடக்கத்தில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கே.எல்.ராகுல் 3 முறை வாய்ப்பு கொடுத்தும் ராஜஸ்தான் அணியினர் அவரை அவுட்டாக்க தவறிவிட்டனர். இதனால் முதல் விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 120 ரன்களை குவித்து விட்டது. இதில் கே.எல்.ராகுல் 49 ரன்கள், மயங்க் அகர்வால் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினர். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரண் கூட்டணி அணியின் ரன் ரேட்டிங்கை கணிசமாக உயர்த்தினர்.
இந்நிலையில் கடைசி ஓவரில் 4 ரன்களை எடுக்க வேண்டிய பஞ்சாப் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுவும் அறிமுக வீரர் கார்த்திக் தியாகி என்பதுதான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடைசி ஓவரில் முதல் பந்து டாட் ஆகிவிட இரண்டாவது பந்தை வீசினார் கார்த்திக். 2 ஆவது பந்தில் மார்க்ரம் ஒரு ரன்னை எடுத்தார். அடுத்து 3 ஆவது பந்தில் நிக்லோஸ் பூரண் அவுட். அடுத்து 4 ஆவது பந்து டாட் ஆகிறது. 5 ஆவது பந்தில் தீபக் ஹுடா அவுட். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதுவும் டாட் ஆகிறது. இதனால் ராஜஸ்தால் ராயல் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதில் கார்த்திக் தியாகி ஒரு ஓவருக்கு 1 ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர் அதுவும் முன்னாள் வீரரான சேவாக் குழந்தைகள்கூட அடிக்கடி டயப்பரை மாற்றிக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அடிக்கடி தனது பிளேயிங் 11 ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறது என விமர்சித்து உள்ளார்.
இதற்கு காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம்வரும் கிறிஸ் கெயிலை இந்த முறை பஞ்சாப் அணி புறக்கணித்து இருக்கிறது. அதேபோல பந்துவீச்சில் அபாரத் திறமைகொண்ட ரவி பிஷ்னாய்க்கு பதிலாக இஷான் பொரோல் எனும் இளம் வீரரை களம் இறக்கி இருக்கிறது. இதனால் பந்து வீச்சிலும் சொதப்பல். இதுபோன்ற காரணங்களால் பஞ்சாப் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதாகப் பலரும் கருத்துக் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout