72 வயது டைப்பிஸ்ட் பெண்ணை ஒரே நாளில் பிரபலப்படுத்திய சேவாக்

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் 72 வயது பெண் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டால் பிரபலம் ஆகிவிட்டார்

சேஷோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வரும் பொதுமக்களுக்கு டைப் செய்து கொடுக்கும் தொழிலை கடந்த 12 வருடங்களாக செய்து வருபவர் 72 வயது வெர்மா என்ற பெண். இவர் இந்தூரில் உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து கொண்டிருந்தபோது டைப்பிங் பழகி கொண்டார். இவரது டைப்பிங் வேகத்தை பார்த்த கலெக்டர் தனது அலுவலகத்தின் முன்பே ஒரு இடம் கொடுத்து அவருக்கு தேவையான வசதியும் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு நபர் வெர்மா டைப் அடிப்பதை வீடியோ எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த வீடியோ பலரால் லைக் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் தனது டுவிட்டரில் அந்த வீடியோவை பதிவுசெய்தார். இவர்தான் என்னை பொருத்தவரையில் சூப்பர் பெண் என்றும், இன்றைய இளைஞர்கள் இவரிடம் இருந்து உழைப்பு என்றால் என்ன என்பதை கற்று கொள்ள வேண்டும் என்றும், இதில் இருந்து எந்த வேலையும் சிறியதல்ல என்பதும் வேலை செய்ய வயது ஒரு தடை அல்ல என்பதும் அனைவருக்கும் புரிய வரும் என்றும் சேவாக் பதிவு செய்துள்ளார்.

சேவாக்கின் இந்த ஒரே ஒரு டுவீட் அந்த டைப்பிஸ்ட் பெண்ணை இந்திய அளவில் பிரபலமாக்கிவிட்டது.