ரோஸ் டெய்லருக்கு ஆதார் கிடைக்குமா? சேவாக் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ஓய்வு பெற்றாலும் தனது நகைச்சுவையான டுவீட்டுக்கள் மூலம் அவ்வப்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருப்பார்
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய-நியூசிலாந்து அணிகளின் டி-20 போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லரை கலாய்க்கும் வகையில் டெய்லர் என்ற பெயரை மொழிபெயர்த்து தையல்காரர் என்ற பொருள் கொள்ளூம் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார்
இதற்கு இந்தி மொழியில் பதிலளித்த ரோஸ் டெய்லர், 'ராஜ்கோட் போட்டிக்குப் பின்னர் டெய்லர் கடை மூடப்பட்டுள்ளதாகவும் அடுத்த டெய்லர் பணி திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த பணியை பார்க்க அவசியம் திருவனந்தபுரம் வாருங்கள்'' என்றும் டுவீட் செய்தார்
டெய்லரின் இந்தி புலமையை பாராட்டிய சேவாக், இந்த புலமைக்காக அவருக்கு ஆதார் எண் கிடைக்குமா? என்று ஆதார் நிறுவனத்திடம் கேள்வி கேட்டிருந்தார். சேவாக் கலாய்க்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாத ஆதார் நிறுவனம் இதற்கு பதிலளிக்கையில் ''மொழி ஒரு பிரச்சினை அல்ல என்றும் ஆதார் பயனரின் குடியுரிமை மட்டுமே முக்கியம்'' என்று பொருப்பாக பதிலளித்தது. இதற்கு மீண்டும் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் ''எவ்வளவு வேடிக்கைகளைப் பார்த்தாலும், கடைசியில் அரசாங்கத்தின் வேடிக்கைதான் சிரிப்பை வரவழைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments