டிரிம் செய்யப்பட்ட சீதக்காதி: புதிய ரன்னிங் டைம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான 'சீதக்காதி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும், பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது. இருப்பினும், படத்தின் நீளம் மற்றும் ரிப்பீட் காட்சிகள் ஒரு குறையாக விமர்சர்களால் கூறப்பட்டது. குறிப்பாக ராஜ்குமார் மற்றும் சுனில் காட்சிகள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்ததால் ரிப்பீட் காட்சிகளாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் நீளம் டிரிம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒரிஜினல் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் இருந்த நிலையில் தற்போதைய ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் படம் டிரிம் செய்யப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்து திருப்தி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.

படத்தின் நீளம் 23 நிமிடங்கள் குறைக்கப்பட்டாலும், படத்தின் முக்கிய மேஜிக் காட்சிகள் இடம்பெறும் என்றும், டிரிம் செய்யப்பட்ட உணர்வே இருக்காது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

More News

கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: ரஜினியை கலாய்த்த பெட்டிக்கடைக்காரர்

ஒருசில கடைகளில் கடன் கிடையாது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக அறிவிப்பு பலகை மூலம் கூறுவதுண்டு.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' ரிலீஸ் குறித்த தகவல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் சிங்கிள் பாடலை இன்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்பது தெரிந்ததே

மோடி, ராகுல்காந்தி வரிசையில் இடம் பிடித்த தளபதி விஜய்

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய நபர்கள் குறித்த பட்டியல் ஒன்றை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

ரஜினி எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

கமலின் தனித்தன்மையும் ரஜினியின் சுயரூபமும்: நாஞ்சில் சம்பத்

கமல்ஹாசன் நாடாளமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறியிருப்பது அவரது தனித்தன்மையை காட்டுவதாகவும், கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை அதனால் டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்லவில்லை