நானே சரித்திரமாக மாறிவிட்டேன்: 'சீதக்காதி' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Wednesday,November 21 2018]
கோலிவுட் திரையுலகின் வெற்றி நாயகனான விஜய்சேதுபதி நடித்த அடுத்த படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
அய்யா என்ற நாடக, சினிமா நடிகரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும்போது திடீரென நடிக்க மறுத்துவிடுகிறார் அய்யா. அதனால் ஏற்படும் குழப்பங்கள், இழப்புகள், மிரட்டல்கள் ஆகியவற்றை அய்யா எப்படி சமாளிக்கின்றார் என்பதை த்ரில்லுடன் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது டிரைலரில் இருந்து புரிகிறது.
விஜய்சேதுபதியின் மிகைப்படுத்தாத மேக்கப் மற்றும் நடிப்பு, அமைதியான தோற்றம், பீரியட் படங்களுக்கு ஏற்ற கேமிரா கோணங்கள், கோவிந்த் வசந்தாவின் அருமையான பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்வாக இந்த டிரைலரில் இருந்து பார்க்கப்படுகிறது.
மேலும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த போல' படம் போலவே அடுத்தது என்ன நடக்கும்? என்பதை த்ரில்லுடன் கூறும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன் என்பதும் இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
மொத்தத்தில் முழு படத்தையும் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த டிரைலர் தூண்டியுள்ளதால் விஜய்சேதுபதிக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கின்றது என்றே தெரிகிறது. டிரைலரின் முடிவில் 'ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், 'நானே சரித்திரமாக மாறிவிட்டேனே' என்ற வசனம் பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது.