'சீதக்காதி' சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற தரமான படைப்பு, 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த சிறப்பு வேடம், 'செக்க சிவந்த வானம்' படத்திற்காக பெற்ற பாராட்டு, இதையெல்லாம் தாண்டி '96' படத்தில் வெளிப்படுத்திய உச்சகட்ட நடிப்பு ஆகியவற்றுக்காக விஜய்சேதுபதியின் பெயர் தொடர்ந்து கடந்த சில மாதங்கள் ஊடகங்களின் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி தற்போது 'நரசிம்மரெட்டி' படத்திற்காக ஜார்ஜியா சென்றுள்ளார் என்று வெளிவந்த செய்தியையும் இன்று பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் இன்னொரு திரைப்படமான 'சீதக்காதி' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று விஜய்சேதுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்ரனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

18 வயது இளம்பெண் மீது காதல் கொண்டாரா வைரமுத்து? சின்மயி அதிர்ச்சி டுவீட்

பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளம் மூலம் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி

கற்பழித்தார், என் அப்பாவை கொலை செய்தார்: சல்மான்கான் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். தனுஸ்ரீதத்தா, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பலர்,

தம்மாதுண்டு 'ஆங்கர்' தாண்டா அவ்வளவு பெரிய கப்பலை நிறுத்துது: 'வடசென்னை' புதிய டீசர் விமர்சனம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை'

கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த மடோனா செபாஸ்டியன்

தளபதி விஜய்யின் 'சர்கார்' மற்றும் புரட்சி தளபதி விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் நாயகியான கீர்த்திசுரேஷ், தமிழின் முன்னணி நடிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில்

சின்மயி 'மீ டூ' லிஸ்ட்டில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதை அடுத்து அவரை போலவே தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்களை சில பெண்கள் தைரியமாக கூறி வருகின்றனர்