விஜய்சேதுபதியை சீதக்காதி கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை: பாலாஜி தரணீதரன்

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் பேசியவர்களின் விபரம் வருமாறு:

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா: சீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம். இந்த படம் வாழ்க்கையை பற்றியும், கலையை பற்றியும் பேசும். மனதை வருடும் ஒரு அனுபவமாக இருக்கும், படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதை உணர்வீர்கள்

ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த்: நானும் பாலாஜியும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். இந்த படம் எனக்கு முதல் படமாக கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். கதைக்கேற்ற வகையில் செயற்கைத்தனம் இல்லாமல், யதார்த்தமாக வண்ணங்களில் நிறைய உழைத்திருக்கிறோம்

கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார்: தனியாக படம் செய்யும் தன்னம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை, ஆனால் என்னை ஊக்குவித்து எனக்கு ஒரு பக்க கதை படம் கொடுத்தவர் பாலாஜி அண்ணா. அதை தொடர்ந்து இந்த படத்தையும் என்னை நம்பி கொடுத்திருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படமுமே தனித்துவமாக இருக்கும். தயாரிப்பாளர்களும் மிகவும் தெளிவானவர்கள், மிகவும் சுதந்திரம் கொடுத்தனர். சேது அண்ணாவுடன் 3 படம் வேலை செய்திருக்கிறேன். அவரை இந்த படம் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும் .

எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ்: இந்த படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான். ஒவ்வொரு காட்சியும் எடிட் செய்யும் போது என்னை அப்படியே கட்டிப் போட்டது. லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருக்கிறது, ரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் படத்தில் முழுக்க இருக்கிறது .

தயாரிப்பாளர் ஜெயராம்: இந்த கதையை அவர் சொன்னபோதே இதை எப்படி அவர் யோசித்தார் என்பது தான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக எந்த ஒரு ஹீரோவும் தங்களது லேண்ட்மார்க் படத்தை ஒரு பெரிய பேனரில், மிகப்பெரிய படமாக தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் விஜய் சேதுபதி 25வது படத்தை எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார். அவரின் 50, 75 மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம் .

இயக்குனர் பாலாஜி தரணீதரன்: இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம்

விஜய் சேதுபதி: என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது. இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ், நிர்வாக தயாரிப்பாளர் ஏ குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு பிரியங்கா, ஒலிப்பதிவாளர் சுரேன், பப்ளிசிட்டி டிசைன் கோபி பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

More News

உணவு திருடிய சாப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோவில் தனியார் உணவு சப்ளை நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவினை பிரித்து சிறிதளவு சாப்பிட்டுவிட்டு

ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகையின் சாட்டையடி பதில்

சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்

2வது டெஸ்ட்டில் ரோஹித், அஸ்வின் நீக்கம்! இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

'நாடோடிகள் 2' படத்தை அடுத்து மீண்டும் ஒரு 2ஆம் பாக படத்தில் சமுத்திரக்கனி

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2'

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சியில் ரஜினி: சிறப்பான வரவேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த