close
Choose your channels

இவருக்கு பதில் இவர்.. குக்கிங் ஷோவில் இருந்து விலகிய சீதா.. என்ட்ரி ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை..!

Tuesday, October 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியல்களில் அவ்வப்போது இவருக்கு பதில் இவர் என கேரக்டர் மாற்றம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் தற்போது ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு பதில் இவர் என்ற மாற்றம் நடந்துள்ளது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் சேனலில் கடந்த சில வாரங்களாக குக்கிங் நிகழ்ச்சியான ’சமையல் எக்ஸ்பிரஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் நடிகை சீதா மற்றும் புதுவையைச் சேர்ந்த மெக்னஸி ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக சீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் சீதா யோசித்ததாகவும், அதன் பின்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில அசௌகரியங்கள் காரணமாக சீதா அப்செட் ஆனதை அடுத்து இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ’சமையல் எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியில் தற்போது சீதாவுக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் நடித்த நடிகை சுஜிதா கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் இருப்பதால், சுஜிதா இந்த நிகழ்ச்சியில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment