முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கோரிக்கையின் விபரம் பின்வருமாறு:
வெளிநாடுகளில் திரைப்படம் எடுக்க பல அழைப்புகள் வருகின்றன.
அந்த அழைப்பில் எங்கள் நாட்டில் படம் எடுங்கள், எங்கள் கலாச்சாரத்தை உலகிற்கு காட்டுங்கள், படப்பிடிப்பு செலவில் பாதி தருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இங்கு, நாங்கள் வாழும் நாட்டில், எங்கள் மக்கள் வாழும் பகுதிகளை, திரையில் காட்ட அனுமதி இல்லை. விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அரசு நிறுவனங்கள், கல்லூரி, சட்டமன்றம், அருங்காட்சியகம், கோர்ட், மருத்துவமனை இன்னபிற வாழ்வியல் களங்கள் அனுமதியில்லை. தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
வாழ்வியல் படங்கள் எடுக்க விரும்பும் என் போன்றோர் நாங்கள் வாழ்ந்த இடங்களை பதிவு செய்ய அனுமதி வேண்டும். இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி தனது கோரிக்கையாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com