என் உயிருக்கு ஆபத்து: இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டால் பரபரப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான சீனு ராமசாமி ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்ப்பறவை’, ’தர்மதுரை’, ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ’மாமனிதன்’ மற்றும் ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி முடித்து விட்டு அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது சமூக கருத்துக்களை ஆக்கபூர்வமாக தெரிவித்து வருபவர்களில் ஒருவர் சீனுராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளுடன் தெரிவித்தவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது திடீரென தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு முதல்வர் ஐயா தனக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவர் பதிவு செய்த டுவிட் பின்வருமாறு: என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்த ஒரு ட்வீட்டை பதிவு செய்து, அதன் பின்னர் தவறாக பதிவு செய்யப்பட்டதாக சீனுராமசாமி விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.