தமிழக முதல்வருக்கு புதிய அடைமொழி பெயர் வைத்த இயக்குனர் சீனுராமசாமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சீனு ராமசாமி தனது படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு புதிய அடைமொழி பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதிக்கு ’மக்கள் செல்வன்’ என்றும் உதயநிதிக்கு ’மக்கள் அன்பன்’ என்றும் பெயர் வைத்தது அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி முதல்வருக்கு ’ஆண் தாய்’ என்ற அடைமொழி பட்டத்தை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது திரைப்படங்களை பார்த்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி அதன் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ’ஆண் தாய்’ மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் ’மாமனிதன்’ ’இடிமுழக்கம்’ ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று, என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்திற்கு எதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீட் எழுதிய ’உலகை உலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன்.
அவர் தன் வரலாற்று நூலின் முதல் பாகமான ’உங்களில் ஒருவன்’ நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். மக்கள் அன்பன் என் ’கண்ணே கலைமானே’ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்து வாழ்த்தினார். இவ்வாறு சீனு ராமசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக முதல்வர் @mkstalin ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கு
— Nikil Murukan (@onlynikil) April 19, 2022
நன்றி கூறி
ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை தந்து
தனது மாமனிதன்,இடிமுழக்கம் படங்களுக்கு வாழ்த்தும்
உங்களில் ஒருவன் நூலை பரிசாக பெற்றார் @seenuramasamy உடன்@Udhaystalin #NM pic.twitter.com/VyT2mC2BP6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments