இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணமா? டுவிட்டரில் விளக்கம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி என்பதும், அதன் பின்னர் ’நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’ ’மாமனிதன்’ ’இடம் பொருள் ஏவல்’ உள்பட ஒருசில படங்களை சீனுராமசாமி இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில் திடீரென அவரது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சீனு ராமசாமி குறித்த திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஹைத்ராபாத்தில் ஐபிஎல்லை மையமாக வைத்து சூதாட்டம்; 730 கோடியை தாண்டும் என அதிர்ச்சி!!!

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டிகளை மையமாக வைத்து இளைஞர்கள் சூதாட்டங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும்

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென

இரண்டாவது நாளிலும் 'மேன் ஆஃப் த மேட்ச்: அசத்தும் அறந்தாங்கி நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அசத்திய அறந்தாங்கி நிஷா நேற்று இரண்டாவது நாளிலும் பார்வையாளர்களின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார்