மற்றவர்களை விட ஆண்டாளை அதிகம் நேசிப்பவர் வைரமுத்து: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் இந்த பிரச்சனையை நீட்டிப்பது சரியில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:

இந்து மத பெண் துறவிகள் என்பதுதான் தேவதாசி என்பதற்கான உண்மையான பொருள்.

தேவதாசி என்ற சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் அதை கவிஞர் வைரமுத்து மேற்கோளாக கூட காட்டி இருக்க வேண்டியது இல்லை.

நான் பள்ளிப் பருவத்தில் கோவில்களில் மார்கழி அதிகாலையில் தேவாரம், திருப்பாவை,  திருவம்பாவை வகுப்புகளில் மாணவனாக பாடி இருக்கிறேன்

நான் அறிந்த வரை கவிஞர் வைரமுத்துவை தாக்குபவர்களை விட கோதை ஆண்டாளையும், அவரது தமிழையும் ஏனைய பக்தி இலக்கியங்களில் உள்ள தமிழ்ச்சுவையும் அதிகம் நேசிப்பவர் அவர். அதற்கு உதாரணம் கம்பனில் தொடங்கி தொடர்ந்து அவர் செய்து வரும் பக்தி இலக்கிய கட்டுரைகள்.

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

More News

பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்

தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்

ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.

இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் ஜூலியின் முதல் படத்தின் ஷாக்கிங் டைட்டில்

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களிடம் புகழ் பெற்றவர் ஜூலி.