அம்மியில் மிளகு அரைத்து ரசம் செய்த பிரபல இயக்குனர்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரையுலகினர் பலர் விதவிதமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே, குறிப்பாக நடிகைகளின் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி தனது கையால் அம்மியில் மிளகு சீரகம் உள்ளிட்டவற்றை அரைத்து அவரே ரசம் வைக்கும் காட்சியின் வீடியோ அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இன்றைய தலைமுறைகள் அம்மி என்பது எப்படி இருக்கும் என்பதையே பார்த்திராத நிலையில் நமது பாரம்பரிய உணவு வகையில் ஒன்றான ரசத்தை அவர் அம்மியில் அரைத்து வைக்கும் அழகே தனிதான். இந்த வீடியோவின் கடைசியில் ’கொரோனாவின் ஊரடங்கினால் ஒரு ரசவாதம் நிகழ்கிறது’ என்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பல நடிகைகள் ‘டால்கோனா காபி’ என்ற ஒரு காபியை உருவாக்கும் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் சீனுராமசாமி போல் பாரம்பரிய உணவு வகைகளை ஞாபகப்படுத்தும் வகையில் திரையுலகினர் குறிப்பாக நடிகைகள் வீடியோவை பதிவு செய்யலாமே என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
— Seenu Ramasamy (@seenuramasamy) April 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments